Monday, November 15, 2010

விளையாத விதைகள்

நிழலாக விழுந்தாளே கண்ணில்
விழுந்ததும் கவர்ந்தாளே
நெஞ்சை !

நினைவாக படர்ந்தாளே
என் எண்ணத்தில் நிலவாக வளர்ந்தாளே !!

உயிரினிலே கலந்தாளே
உதிரத்தில்
தேனாகி இனித்தாளே !!

சுவாசமாக நிறைந்தாளே ,

சிந்தையில்
உதித்தாளே !!
சிலாகித்து சிரித்தேனே !

விதையாக பதிந்தாளே

விதியே இனி இருட்டாகி போனதுவோ
அந்நாள் முதல் !?

காரணம் ; காதலென நினைத்த கணம்
கானலாகி போனாளே

மறைந்தாளே ; மறந்தாளோ ; மரித்தேனே..,
மண்ணோடு மழையாக விளையாத விதை போலே !!??

(கானல் நீர் மட்டுமே பார்த்த சில காதல் விதைகளுள் ஒன்றாக~இராஜசேகர் )


Tuesday, October 26, 2010

அனந்த தீபாவளி



சிறு வயதில்

விழி வைத்து காத்திருப்போம் நாட்காட்டியில் .,
இவ்வழகிய ஒளி திருநாள் காண..!!

தற்போது வாலிபம் பூத்தாலும்
எப்போதும் மறையாத இனிய கனவுகள் சட்டென்று

மின்னிடுமே மத்தப்பூவாக ...!!

தொலைத்த மகிழ்ச்சியை தேட நேரமில்லை

எதிர்கொள்ளும் இன்பத்தை இனிதே வரவேற்ப்போம்..!!

பட்டாசுகளுடன்

சிதறட்டும் கவலைகளும்,துன்பங்களும்...!!

மத்தாப்பூ போல் சிரிக்கட்டும்
உதடுகளுடன் உள்ளமும்,
சிறக்கட்டும் எதிர்காலமும்...!!

இனிப்புகளுடன் மட்டுமல்ல இனிய"நட்புகளுடன்" கொண்டாடுவோம்..!!
அனந்த
தீபாவளி வாழ்த்துக்களுடன் ~ராஜஷேகர்~

Thursday, September 16, 2010

சொல்லத்தான் நினைக்கிறேன்






எதிர் பாராமல் நடந்த இனிய சந்திப்புகள்
போகும்போது பார்க்கிறாள்-பார்க்கும் போது சிரிக்கிறாள் ;
சிலிர்க்கிறேன்
அவளுக்கும் ஏன் மேல் ஈர்ப்பு வந்திருக்குமோ ?
எனக்கு வந்து விட்டதே அதனால் ...


ஒருநாளின் தொடுவானம் சிவக்கும் நேரம்
கலைந்து செல்லும் கல்லூரியினர் கூட்டத்திற்குள்...
போர்முனைக்கு செல்லும் வீரனின்
பயம் கலந்த தைரியம் .!
சென்றேன் அவளருகில் ...


பார்வைகள் மோதிக்கொண்டன ..
வார்த்தைகுண்டுகள் வெடிக்காமலே
கலவர பூமியானது முகம்; எங்கும் வியர்வை ரணம்
இதயத்தின் படபடப்பு பலமாக தாக்கியதில்
இருபது விரல்களுக்குள்ளும் படுகாயம்
மூளைக்குள் இருந்து உதவி ராணுவம்:
உடலெங்கும் ஊரடங்கு உத்தரவு...

சொல்லாத காதலின் அனைத்து தருணமும்
இப்படித்தான் ....

காரணம் தெரியாத போராக,
கோரிக்கை இல்லா வன்முறையாக,
கொள்கை இல்லாத கலவரமாக,
காதலால்
மனதிற்குள் தான் எவ்வளவு போராட்டங்கள் ...?!?!?!

சொல்லாமல்
தவிக்கிறேன்


Wednesday, September 1, 2010

கண்களால் மட்டும் காதல் (கைது) செய்தாள் ..!



கண்ட நாள் முதல்...,
மலராது என்றே விதைத்தேன்
பூக்கதேன்று நினைத்தே நீர் இறைத்தேன்.
அன்று தொட்டு
தொடங்கிவிட்டேன் என் இனிய தவத்தை.....
கண்களும் இமைக்க மறுக்கும்
அவள் கனிந்த முகம் காணும் வரம் கிடக்கவே
என் புன்னகைப்பூவை காண ...,

விடியல்கள் பல சென்றதும்
என்னால் அவளுள் கண்டேன் காதலை...

ஆனாலும் தயக்கம் கொண்டாளோ..
கால் விரலால் கவிதை எழுதினாள்
கை விரல்கள் தறியாகி துப்பட்டாவை திரும்பவும் நெய்தன ..


கண்களால் கைது செய்தாள்...


மறுமுறை சொல்கிறேன்
இதயமெனும் சிறையில் அடைத்தது போதும்..
இதழ்களெனும் வாள் கொண்டு இனிய போரை
துவக்கிவிடு
காற்றாக நான் மாறி கவிதை மாரி பொழிந்திடுவேன்
அழகே நீ கன்னத்தில் முத்தமிட்டால்...

சொல்லாமல் சோதிக்கிறாயா ?...
உனக்கென்ன வேதனைகளோ ....!
கண்கள் நின்றும் நில்லாமல் சென்ற பாதங்கள்
மேல் நான் கோபம் கொள்ளவில்லை...

பார்வையில் மட்டும் காதல் கொண்ட பாவை நீ !

மறுபடியும் திரும்பினால்...;

உன் பார்வைக்காக நிலவும்
உன் சிரிப்புக்கு குயிலும்
உன் வரவுக்கு உதிராதிருந்த மலரக்ளும் போல்...
காத்து நிற்கிறேன் நீ வருவாய் என ...!

Friday, June 11, 2010

காதல் பாதை

விரல்கள் கோர்த்த நடை மீண்டும் , வரமாக கிடைத்தது மண்ணில்... தாய்க்குப்பின் தேவதையே உன்னுடன் ...


அலைகளில் விளையாடிய கால்கள் அமைதியாக நனைந்தன உன்னுடன்...

இன்றோடு அஸ்தமனமா? இல்லை நாளையும் விடியல் உண்டு உன்னுடன்...

பிரியப்போகும் நிமிடம் பார்வைக்குபின் கன்னம் நனையப்போகும் தருணம்... பாதைகள் நம்மை பிரிக்கலாம்...

விட்டு விடாதே விரல்களை மட்டுமல்ல; முத்தமிட்டபின் என் இதழ்களையும் தான்...!!!


~RA~

Monday, June 7, 2010

விண்ணை தாண்டி வருவாயா


உன்னை நினைத்ததாலே மேகம்
அறிந்தேன் ....

விண்மீன்
அனைத்திலும் உன் விழிகள் கண்டேன் ...

உன்
சிரிப்பாலே சிந்தை
கலங்கினேன்....

நிலவாக
நீயிருந்தால் உன் ஒளி படவே
நிலமாக
நான் கிடப்பேன்....

உனதன்பு
உண்மை என்றால் நிலவே...,
"விண்ணை தாண்டி வருவாயா" ...?
ப்ரியமுடன்~ரா~

Sunday, February 14, 2010

நம்மிடம் அன்பு காட்டும் அத்தனை இதயங்களையும் நாமும் அன்பால் காதல் செய்வோம்......!!!
என் அன்னை முதல் என் கால்கள் பூமிதொட்ட நாள் முதல் இன்று வரை என்னிடம் அன்புக்காட்டிய அனைத்து இதயம்களுக்கும் என் மனமார்ந்த காதலர் திருநாள் வாழ்த்துக்கள்....!!

காதலுடன் ~கவிப்பிரியன்~