Wednesday, February 2, 2011

நட்புக்கு மரணமில்லை

மனிதமே உனக்குள் இருந்து பேசுகிறேன்

நீ வயதானாலும்
என்றும் மாறாத இளமையாக நான்..,

கல்லை கூட ஆராய்ச்சி கொண்டு கணித்துவிட்டான் வயதை.,
கலியுகம் முடிந்தாலும் காணக்கூடுமோ என் விதையை.,

புவிமுழுக்க ஆட்சி செய்யுது என் விழுதுகள்
நான்நின்றி விடியுமோ முடியுமோ முப்பொழுதுகள் .,

நிதம் நூறாயிரம் பிணையுது என் கொடிகள் .,
என் பிறப்பிற்கு போதுமே சில நொடிகள்

உணர்சிகளுக்கு உயிர் தந்து
உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து
உறவுக்குள் பிறக்காத உறவாக
ஆக்சிஜன் ஆதாரம் தேடாத
அன்பெனும் அணு கொண்டு
ஹார்மோன்கள் தேவை படாத கருவானேன்
இதயமென்னும் இன்ப சோலையொன்று போதும் நான் உருவாக...
நட்பென்ற பெயர் கொண்ட சிசுவாக..

இனியும் சொல்லவேண்டுமோ என் அவசியம்.,
நான் ரகசியமில்லா அதிசயம்.

பூமிபந்து எனை புழங்காத நாளேது !?
எவர் பால் காணினும் நானே,
கணக்கற்ற உயிர்களுக்குள்ளும் நானே ..,

பாசங்கொண்ட மனங்கள் போதும்
என்னால் நண்பர்களெனும் உறவுக்குள் கைகோர்க்க..,

உலகில் அன்பெனும் நீரூற்று வற்றாதவரை
நட்பெனும் பூச்செடி எனக்கு மரணமில்லை ....!!!!

ப்ரியமுடன்~ராஜஷேகர்~


Tuesday, February 1, 2011

அவர்களிடமும் சுதந்திர தாகம்வையகத்தில் உருவெடுத்தோம் மாபெரும் மந்தைக்குள்ளே
மண்ணில் பிறப்பெடுத்தோம் மானிடர் ஜாதியாக .,

கல்லிலே கதைகள் வடித்த வரலாற்று கண்ணீரை சொல்லிலே
துடைக்க வந்தேன் கவியோன்றில் கூற்று வைத்தே ..,

மந்தைகளே மந்தயினை மேய்க்குமே
ஏய்க்கும் மானிடர் சந்தையிலே அவ்விந்தையத்தை காணலாம் ..,

குருதி கொடுத்த அன்னார்கள் விண்ணில்
இன்று பறக்குது
குடிகெடுக்கும் பல கயவர்கள் கொடி இம்மண்ணில்.,

சிந்தை முழுதும் தேசம் சுகப்பட வேண்டுமென்ற
தந்தை உள்ளம் கொண்ட மகாத்மாக்கள் கொஞ்சமென்றால்

அழுக்கு அரசியலால், பொய்யான ஆன்மீகத்தால்
மிரட்டும் தீவிரவாதத்தால், வேரோடிய லஞ்சத்தால் ,
விலையேறிய மனிதாபிமானத்தால்,
விளையாட்டாய் மாறிய வன்முறையால்
நஞ்சாகி போனதுவே என் சகோதர நெஞ்சங்கள் .,

அடக்குமுறை செய்த ஆங்கிலேயன் விரட்டப்பட்டாலும்
அடிமைவிலங்கை ஆனந்தமாக உடைத்தெரிந்தாலும்.,
நிலைத்ததா இன்றுமட்டும் சுதந்திர பாரதம் .,

தஞ்சமென்று வந்தோரை தயவளித்த தாய் மண்ணே
உனக்கு மஞ்சமிட்டு பூ மாலை இட்டு
சுதந்திர மரத்திற்கு உரமாக்கப்பட்ட
உதிரத்தியாகிகள் பலர் இன்று உயிரோடு இருந்திருந்தால்
இன்னும் தீர்ந்திருக்காது நம்போல்

அவர்களிடமும் சுதந்திர தாகம்..!!
( குறிப்பு: 26.1.2011 குடியரசு விழாவுக்காக என் நண்பரின் வேண்டுகோளுக்காக அவருக்கான கவிதை போட்டிக்கு நான் எழுதிய தாக வரிகளிது...!!)
~கவிப்பிரியன் இராஜஷேகர்~

Friday, December 3, 2010

மௌனத்தின் மொழி

புரிந்துகொண்டேன் புரிந்துகொண்டேன்
உன் மௌனத்தின் மொழியதனை ..

இரவின் கருமை எல்லாம்
உன் நினைவால் வண்ணமாகி தான் போகிறது..

உன் நினைவு தீயை தொடும்போது
விட்டில்பூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்..


சொல்லாமல் வரும்
மரணமும்
காரணம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும்
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போலும்..!?

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
நின்று விடுவதேன்னவோ உறுதி...

மீள முடியாத வேதனை சுமந்து
மறக்க முடியாத பாதைகள் கடந்து
மனம் கனமாய் போகிறது உன்னிடம் மௌனம் கற்று..

சொல்லிவிடு இறந்து விடுகிறேன்;
உன் சொல்லில்லாமல் இறப்பதை விட
சுலபமாக..

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட துளைகளில்
கண்ணீர் சிந்தும் ....

"என் இதயத்தின் இன்னல் கண்டு" .....!!


Monday, November 15, 2010

விளையாத விதைகள்

நிழலாக விழுந்தாளே கண்ணில்
விழுந்ததும் கவர்ந்தாளே
நெஞ்சை !

நினைவாக படர்ந்தாளே
என் எண்ணத்தில் நிலவாக வளர்ந்தாளே !!

உயிரினிலே கலந்தாளே
உதிரத்தில்
தேனாகி இனித்தாளே !!

சுவாசமாக நிறைந்தாளே ,

சிந்தையில்
உதித்தாளே !!
சிலாகித்து சிரித்தேனே !

விதையாக பதிந்தாளே

விதியே இனி இருட்டாகி போனதுவோ
அந்நாள் முதல் !?

காரணம் ; காதலென நினைத்த கணம்
கானலாகி போனாளே

மறைந்தாளே ; மறந்தாளோ ; மரித்தேனே..,
மண்ணோடு மழையாக விளையாத விதை போலே !!??

(கானல் நீர் மட்டுமே பார்த்த சில காதல் விதைகளுள் ஒன்றாக~இராஜசேகர் )


Tuesday, October 26, 2010

அனந்த தீபாவளிசிறு வயதில்

விழி வைத்து காத்திருப்போம் நாட்காட்டியில் .,
இவ்வழகிய ஒளி திருநாள் காண..!!

தற்போது வாலிபம் பூத்தாலும்
எப்போதும் மறையாத இனிய கனவுகள் சட்டென்று

மின்னிடுமே மத்தப்பூவாக ...!!

தொலைத்த மகிழ்ச்சியை தேட நேரமில்லை

எதிர்கொள்ளும் இன்பத்தை இனிதே வரவேற்ப்போம்..!!

பட்டாசுகளுடன்

சிதறட்டும் கவலைகளும்,துன்பங்களும்...!!

மத்தாப்பூ போல் சிரிக்கட்டும்
உதடுகளுடன் உள்ளமும்,
சிறக்கட்டும் எதிர்காலமும்...!!

இனிப்புகளுடன் மட்டுமல்ல இனிய"நட்புகளுடன்" கொண்டாடுவோம்..!!
அனந்த
தீபாவளி வாழ்த்துக்களுடன் ~ராஜஷேகர்~

Thursday, September 16, 2010

சொல்லத்தான் நினைக்கிறேன்


எதிர் பாராமல் நடந்த இனிய சந்திப்புகள்
போகும்போது பார்க்கிறாள்-பார்க்கும் போது சிரிக்கிறாள் ;
சிலிர்க்கிறேன்
அவளுக்கும் ஏன் மேல் ஈர்ப்பு வந்திருக்குமோ ?
எனக்கு வந்து விட்டதே அதனால் ...


ஒருநாளின் தொடுவானம் சிவக்கும் நேரம்
கலைந்து செல்லும் கல்லூரியினர் கூட்டத்திற்குள்...
போர்முனைக்கு செல்லும் வீரனின்
பயம் கலந்த தைரியம் .!
சென்றேன் அவளருகில் ...


பார்வைகள் மோதிக்கொண்டன ..
வார்த்தைகுண்டுகள் வெடிக்காமலே
கலவர பூமியானது முகம்; எங்கும் வியர்வை ரணம்
இதயத்தின் படபடப்பு பலமாக தாக்கியதில்
இருபது விரல்களுக்குள்ளும் படுகாயம்
மூளைக்குள் இருந்து உதவி ராணுவம்:
உடலெங்கும் ஊரடங்கு உத்தரவு...

சொல்லாத காதலின் அனைத்து தருணமும்
இப்படித்தான் ....

காரணம் தெரியாத போராக,
கோரிக்கை இல்லா வன்முறையாக,
கொள்கை இல்லாத கலவரமாக,
காதலால்
மனதிற்குள் தான் எவ்வளவு போராட்டங்கள் ...?!?!?!

சொல்லாமல்
தவிக்கிறேன்


Wednesday, September 1, 2010

கண்களால் மட்டும் காதல் (கைது) செய்தாள் ..!கண்ட நாள் முதல்...,
மலராது என்றே விதைத்தேன்
பூக்கதேன்று நினைத்தே நீர் இறைத்தேன்.
அன்று தொட்டு
தொடங்கிவிட்டேன் என் இனிய தவத்தை.....
கண்களும் இமைக்க மறுக்கும்
அவள் கனிந்த முகம் காணும் வரம் கிடக்கவே
என் புன்னகைப்பூவை காண ...,

விடியல்கள் பல சென்றதும்
என்னால் அவளுள் கண்டேன் காதலை...

ஆனாலும் தயக்கம் கொண்டாளோ..
கால் விரலால் கவிதை எழுதினாள்
கை விரல்கள் தறியாகி துப்பட்டாவை திரும்பவும் நெய்தன ..


கண்களால் கைது செய்தாள்...


மறுமுறை சொல்கிறேன்
இதயமெனும் சிறையில் அடைத்தது போதும்..
இதழ்களெனும் வாள் கொண்டு இனிய போரை
துவக்கிவிடு
காற்றாக நான் மாறி கவிதை மாரி பொழிந்திடுவேன்
அழகே நீ கன்னத்தில் முத்தமிட்டால்...

சொல்லாமல் சோதிக்கிறாயா ?...
உனக்கென்ன வேதனைகளோ ....!
கண்கள் நின்றும் நில்லாமல் சென்ற பாதங்கள்
மேல் நான் கோபம் கொள்ளவில்லை...

பார்வையில் மட்டும் காதல் கொண்ட பாவை நீ !

மறுபடியும் திரும்பினால்...;

உன் பார்வைக்காக நிலவும்
உன் சிரிப்புக்கு குயிலும்
உன் வரவுக்கு உதிராதிருந்த மலரக்ளும் போல்...
காத்து நிற்கிறேன் நீ வருவாய் என ...!