Sunday, January 10, 2010

தந்தையின் தவிப்பு


மகனே
உன்னை தண்டிப்பது என் நோக்கமல்ல..
நீ தடம் பிரள கூடாதே என்பதே என் ஏக்கம் !!


உன்னை கண்டிக்கும் ஒவ்வொரு கணமும் ...
உள்ளுக்குள் கலங்கும் என் மனம் !!

கட்டளைகள் தான் நான் இட்டவை..
கடிவாளங்கள் அல்ல !!

சற்று கடினமானவை தான் நான் சொன்ன சொற்கள் ...
சாட்டைகள் அல்ல !!

தவிப்புகள் தெரியாமல் வளர்த்துவிட்டேன் ..
விடுதலை கொடுத்து விழுந்துவிட்டேன் !!


எடுத்துக்காட்டியதை ஏளனம் செய்தாய் ..
சுட்டிக்காட்டியதை குறைகள் சொல்கிறேன் என்றாய் !!

உன்னை பற்றி
விருப்பங்களை சொல்ல வந்தேன் ..
வெறுப்புகளை பரிசாய் தந்தாய் !!

அன்பை பரிமாற எனக்கு
தெரியவில்லையா..
அல்லது உனக்கு அதன் அருமை புரியவில்லையா ?

நீ கேட்டதை மறுத்திருக்கிறேன்..
அதை விட சிறப்பானதை உனக்கு தர வேண்டி !!

உன் கோபத்தை ரசித்திருக்கிறேன் ...
என்னை பிரதிபலிக்கிறாய் என்று !!

உன் அழுகையின் காரணம் தாய் அறிவாள்
உன் மௌனத்தின் காரணம் நான் அறிவேன் !!

ஆசைகளை துறந்து விட்டேன் ..
உன் எதிர்காலம் நிராசை ஆகிவிடகூடதே என்று !!

கோபங்களை விட்டாயா? என எண்ணுகிறாய்
நீ கோபம் என எண்ணுவது
அது ஒரு தந்தையின் தவிப்பு நிறைந்த ஆதங்கம்
என்பது நீ தந்தை பதவி ஏற்கும் தருணத்தில் அறிவாய்...!!

வேதனைகளை உன் முன் வைத்துவிட்டேன் ..
வேண்டியதை எடுத்துக்கொள் !!

நன்மைகள் தான் சொன்னேன்..
நண்பர்கள் போல் பழகிட ஆசை கொண்டு !!

மரண வாயில் தொடும் வரை ஒரு ஆசை
உன் மகிழ்முகம் கண்டுகொள்ளவே !!

~ ப்ரியமுடன் ~
தோழமை வேண்டும் தந்தை
~~~~~~~~~~~~

No comments:

Post a Comment